அமெரிக்காவில் நாய், பூனையை இறைச்சிக்காக கொல்ல தடை: மீறினால் 3.50 லட்சம் அபராதம், இந்தியாவுக்கும் ‘அட்வைஸ்’

* உலகம் முழுவதும் 3 கோடி நாய்கள் இறைச்சிக்காக ஆண்டுதோறும் கொல்லப்படுகின்றன.

* இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் நாய் இறைச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளது.

* நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் நாய் இறைச்சி சாப்பிடுவது அதிகம்.

* அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் நாய் மற்றும் பூனைகளை வளர்த்து வருகிறார்கள்.

வாஷிங்டன்: நாய் மற்றும் பூனையை இறைச்சிக்காக கொல்ல அமெரிக்கா தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை மீறினால் ரூ.3.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாய் மற்றும் பூனை இறைச்சி வர்த்தகச் தடை சட்ட மசோதா 2018 கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக அமலுக்கு இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் உணவுக்காக நாய் மற்றும் பூனைகளை கொல்வது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ.3.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனா, இந்தியா, தென்கொரியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், மற்றும் அனைத்து நாடுகளின் அரசுகளும் நாய் மற்றும் பூனை இறைச்சி வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மொத்தம் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க எம்பி கிளவுடியா டென்னி கூறுகையில், ‘‘மனிதர்களுடன் நட்புணர்வுடன் நாய் மற்றும் பூனைகள் பழகுகின்றன. ஆனால் சீனாவில் ஆண்டுதோறும் ஒரு கோடி நாய்கள் உணவுக்காக ெகால்லப்படுகின்றன. கருணை மிகுந்த உலகில் இதுபோன்ற நடவடிக்கைக்கு இடமில்லை. இந்த மசோதா அமெரிக்காவின் உணர்வுகளை உலகிற்கு எடுத்துரைக்கிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: