கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான

திருவண்ணாமலை, ஏப்.27: திருவண்ணாமயைில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 29ம் தேதி ெதாடங்குகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில், மல்லர் கம்பம், கால்பந்து, கையுந்து பந்து, தடகளம் மற்றும் இறகு பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முகாமில், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளலாம். தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி நடைபெறும். கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் ₹200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ரொக்கமாக பெற மாட்டாது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள், தங்கள் பெயரை மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் கார்டு நகலை அளிக்க வேண்டும். பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள விளையாட்டுக்களின் விவரங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான appeared first on Dinakaran.

Related Stories: