கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஆக.6: கிருஷ்ணகிரி, ஓசூரில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஒன்றிய பாஜ அரசு, அரிசி, பால், மோர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீது போடப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டியை கண்டித்தும், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் காசிலிங்கம், அக.கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசுதுரை, உமர்பாஷா முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் லலித்ஆண்டனி வரவேற்றார். இதில், விவேகானந்தன், ஜெயபிரகாஷ், ரமேஷ்அர்னால்டு, குமரவேல், வெங்கடபதி, வக்கீல் அசோகன், விநாயகம், ஜெயசீலன், வேடியப்பன், ஹரி, கமலகண்ணன், நாகராஜ், தேவராஜ், சுப்பிரமணி, வின்சென்ட், முபாரக், மைக்கேல் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டனவுரையாற்றினர். இதில் திருமால், அயோத்தி, கல்லாவி ரவி, மத்தூர் மாது, தனஞ்செயன், கிருஷ்ணன், ஜீவானந்தம், முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் வீரமுனிராஜ், மாவட்ட துணை தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட பொருளாளர் மாதேஷ், மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துர் ரஹ்மான், தியாகராஜன், பால்ராஜ், ஹரீஸ் பாபு, பிரவீன்குமார், தாவூத், சுந்தர்ராஜ், குமார், சரோஜா, லலிதா, நதீம், அசேன், செல்வம், முரளி, சீனிவாசன், முத்தப்பா, அனில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை ஏஎஸ்பி அரவிந்த், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

Related Stories: