ஹஷ் பிரவுன்ஸ் (Hash browns)

செய்முறை:உருளைக்கிழங்கைச் சுத்தம்செய்து, தோல் நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாகத் துருவிக்கொள்ளவும். இதை இரண்டு, மூன்று முறை அலசவும். வாய் அகன்ற பாத்திரத்தில் ஐஸ் தண்ணீர் விட்டு, துருவிய உருளைக்கிழங்கைப் போட்டு 20 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் பிழிந்து எடுத்து ஒரு சுத்தமான மெல்லிய துணியில் போட்டு மூட்டையாகச் சுற்றி மீண்டும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழியவும்.; இந்தத் துருவலை ஒரு காய்ந்த துணியின் மேல் போட்டு மீண்டும் சிறிது நேரம் வைக்கவும், இது உதிர் உதிராக இருக்கும். ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயை நான் ஸ்டிக் பானில் (pan) சேர்த்து, உருகியதும் உருளைக்கிழங்குத் துருவலைச் சேர்த்து குழையாமல் உதிர் உதிராக சிறிது நேரம் வதக்கவும். பிறகு, ஆறவிட்டு, இதனுடன் மீதி வெண்ணெயைத் தவிர, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு வெண்ணெய் காகிதத்தில் (butter paper) அரை இன்ச் கனத்தில் சதுரமாக அல்லது வட்டமாக; (அடை மாதிரி) தட்டி மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும் (கையில் வெண்ணெய் தடவிக்கொண்டு தட்டலாம்). அரை மணி நேரத்துக்குப் பிறகு; ஃப்ரிட்ஜில்; எடுத்து விருப்பமான வடிவில்; துண்டுகள் போடவும். மீதி இருக்கும்; வெண்ணெயை நான் ஸ்டிக் பானில்விட்டு, வெட்டிய துண்டுகளை மெதுவாக எடுத்து வைத்து, இரண்டு பக்கமும் வறுத்தெடுக்கவும்.

The post ஹஷ் பிரவுன்ஸ் (Hash browns) appeared first on Dinakaran.

Related Stories: