வேலூர் மார்க்கெட்டுக்கு மாங்காய் வரத்து ஆரம்பம்; ஓரிரு வாரங்களில் சீசன் களைக்கட்டும்: வியாபாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மார்க்கெட்டுக்கு மாங்காய் வரத்து தொடங்கியுள்ள நிலையில் ஓரிரு வாரங்களில் சீசன் களைக்கட்டும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வேலூர் மாங்காய் மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி திண்டிவனம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா வட்டாரங்களில் இருந்தும் மாங்காய் மற்றும் மாம்பழ வரத்து உள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது முதல் பூ விட்டு மாங்காய் காய்க்க தொடங்கியுள்ள நிலையில் வேலூர் மார்க்கெட்டுக்கு மாங்காய் வரத்து தொடங்கியுள்ளது. தற்போது 2 முதல் 5 டன்கள் வரையே வரத்து உள்ளது.அடுத்த சில நாட்களில் முழுமையாக சீசன் களைக்கட்ட தொடங்கும் என்று வியாபாரிகள் நம்பக்கை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாங்காய் மொத்த வியாபாரியிடம் கேட்டபோது, ‘இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருக்கும் என்று மாங்காய் சாகுபடியில் இறங்கியுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதனால் கடந்த ஆண்டை போல இல்லாமல் முதல் பூ விட்ட நிலையில் வேலூர் மார்க்கெட்டுக்கு 2 முதல் 4 அல்லது 5 டன்கள் வரையே வரத்து உள்ளது. அதுவும் திண்டிவனம் வட்டாரத்தில் இருந்து பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் ரகங்கள் மட்டுமே வருகின்றன. சீசன் முழுமையாக தொடங்கும்போது நமது மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் மாங்காய் வரத்து இருக்கும்’ என்று தெரிவித்தார்….

The post வேலூர் மார்க்கெட்டுக்கு மாங்காய் வரத்து ஆரம்பம்; ஓரிரு வாரங்களில் சீசன் களைக்கட்டும்: வியாபாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: