பென்னாகரம், மே 15: பென்னாகரம் அருகே உள்ள நலப்பரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் அன்பரசன்(29), இவர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு நவீனா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 12ம் தேதி, அன்பரசன் வேலைக்கு சென்று விட்டார். நவீனா வீட்டை பூட்டி விட்டு தோட்டத்துக்கு சென்று விட்டார். மதியம் அவர் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த பீரோவில் துணிகள் கலைந்து கிடந்தது. அதில் வைத்திருந்த நெக்லஸ், தோடு, மாட்டல் என மொத்தம் 5 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து அன்பரசன் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.
