விஜயகாந்த் மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தேமுதிக சார்பில், திருச்செங்கோடு கடை வீதி சிவன் கோயிலில், விஜயகாந்த் மறைந்த 30ம் நாளை முன்னிட்டு. நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், மந்திரி, நகர நிர்வாகிகள் குட்டிஆறுமுகம், ரத்தினம், கண்ணன், பெரியசாமி, பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் நாகராஜ், சக்திவேல் மற்றும் சௌந்தரராஜன், வெங்கடாசலம், செல்லம்மாள், அலமேலு, ராஜா, முனியப்பன், ராமசாமி, சக்திவேல், பாஸ்கர், பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்றனர். ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே, சிவன் கோயிலில், மாவட்ட துணைச்செயலாளர் சக்திவேல் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் இளையராஜா, வேல்முருகன், நடராஜ், தனபாண்டியன், சேகர், கோபால் ஆகியோர் பங்கேற்றனர். குமாரபாளையம் 9வது வார்டு சிவன் கோயிலில், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

The post விஜயகாந்த் மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: