லால்குடியில் தங்கி அனுபவ பயிற்சி வேளாண் பல்கலை மாணவர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர்

லால்குடி, ஆக.10: லால்குடி வட்டாரத்தில் வேளாண் பல்கலைகழக மாணவர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் பள்ளி மாணவர்கள் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சிவ இன வரதன், ரூபன், தமிழ் முழக்கன், கருப்பண்ணன், ஜெய்சன் ஐசக் ஆகியோர் ஊரக வேளாண்மைபணி அனுபவத் திட்டத்திற்காக தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதற்காக சிறுமயங்குடி ஊராட்சியில் தங்கி சிறு குறு விவசாயிகளிடம் கலந்துரையாடி விவசாயிகளின் அனுபவங்களை கேட்டறிந்தனர். விவசாயத்தில் நெல் பயிரில் ரசாயன உரங்களை குறைத்து பயிரிடவும், அங்கக வேளாண்மை தொழில்நுட்பத்தை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். மேலும் டி. வளவனூர் ஊராட்சியில் அட்மா திட்டத்தை பார்வையிட்டனர். கொன்னைக்குடி கிராமத்தில் ஜோசப் விவசாய நிலத்தில் குறுவை சாகுபடி நடவு பணி நடைபெற்று வந்த நிலையில் வேளாண் மாணவர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர். மேலும் நடவு பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் அனுபவத்தை கேட்டறிந்தனர்.

The post லால்குடியில் தங்கி அனுபவ பயிற்சி வேளாண் பல்கலை மாணவர்கள் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: