ரூ.2,100 கோடி செலவில் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் காஷ்மீர் சுரங்கப்பாதை இம்மாதம் திறப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீரில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பனிஹல்-காசிகுண்ட் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. 10 ஆண்டுக்கு பிறகு இப்பணி முடிவடைந்துள்ளது. தற்போது, சுரங்கப்பாதையில் பரிசோதனை போக்குவரத்து நடந்து வருகிறது. 3 வாரங்களில் பணிகள் முழுமையாக முடிவடைந்து, இம்மாத இறுதிக்குள் சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என்று இதை கட்டி வரும் நவயுகா என்ஜினீயரிங் கம்பெனி தெரிவித்துள்ளது.
இது, 8½ கி.மீ. தூர இருவழி சுரங்கப்பாதை ஆகும். ரூ.2 ஆயிரத்து 100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை பயன்பாட்டுக்கு வந்தால், ஜம்முவில் உள்ள பனிஹல்லுக்கும், தெற்கு காஷ்மீரில் உள்ள காசிகுண்டுக்கும் இடையிலான தூரம் 16 கி.மீ. குறையும் என கூறப்படுகிறது. சுரங்கப்பாதைக்குள் 126 ஜெட் மின்விசிறிகள், 234 கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு வசதி ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.

The post ரூ.2,100 கோடி செலவில் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் காஷ்மீர் சுரங்கப்பாதை இம்மாதம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: