ராமேஸ்வரம் ரயில் நிலையம் ரூ. 120 கோடி செலவில் மறு சீரமைப்பு: இரண்டு மாடிகள் கொண்டதாக அமைய உள்ளதாக தகவல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் நெரிசலை தவிர்க்க தற்போது உள்ள ரயில் நிலைய கட்டிடம் ரூபாய் 120 கோடி செலவில் புதியதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. புதிய ரயில் நிலையக்  கட்டிடம் இரண்டு மாடிகள் கொண்டதாக அமைய உள்ளது. பிற்காலத்தில் ஆறு மாடிகள் கட்டும் அளவிற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது மாடிக்கு மேலே திறந்தவெளி உணவகங்கள் அமைய இருக்கின்றன. பயணிகள் ரயில் நிலையத்திற்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் மேற்கூறையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான தூண்கள் ராமேஸ்வரம் கோவிலின் பிரபலமான தூண்கள் போல அமைய உள்ளது. நிலையத்தின் வடக்கு பகுதியிலும் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் வர இருக்கிறது. நடைமேடைகள் எண் 3, 4  மற்றும் 5 ஆகியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது. அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைய உள்ளது. பார்சல் அலுவலகம் மற்றும் ரயில்வே சேவை அலுவலகங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்பட உள்ளது. தங்கும் அறைகள், ஓய்வறைகள், கழிப்பறைகள் ஆகியவையும் நவீன வசதிகளுடன் அமைய இருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவடைய 18 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது….

The post ராமேஸ்வரம் ரயில் நிலையம் ரூ. 120 கோடி செலவில் மறு சீரமைப்பு: இரண்டு மாடிகள் கொண்டதாக அமைய உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: