ரஷ்யாவில் டிவி சேனல் ஊழியர்கள் கூண்டோடு ராஜினாமா

மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் பயங்கரமான வடிவங்களை எடுத்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ஒன்றன் பின் ஒன்றாக ரஷ்யா அழித்து வருகிறது. புடினுக்கு எதிராக அவரது நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உக்ரைன் போரைப் பற்றிய செய்தியை மிகைப்படுத்தி வெளியிட்டதாக கூறி சில செய்தி சேனல்களின் ஒளிபரப்பு முடக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்ய தொலைக்காட்சி சேனலின் ஒட்டுமொத்த ஊழியர்களும், தங்களது கடைசி நேரலை ஒளிபரப்பில் ‘போர் வேண்டாம்’ என்ற செய்தியை வாசித்தவாறே தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து ‘டிவி ரெயின்’ சேனலின் நிறுவனர்களில் ஒருவரான நடாலியா சிந்தீவா கூறுகையில், ‘எங்களது கடைசி ஒளிபரப்பில் ‘போர் வேண்டாம்’ என்ற ெசய்தியுடன் எங்களது சேனலின் ஊழியர்கள் அனைவரும் ஸ்டுடியோவை விட்டு வெளியேறிவிட்டோம். எங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளோம்’ என்றார். ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அந்நிறுவனத்தில் இருந்து திடீரென வெளியேறியதால், அந்த சேனல் நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.   இதேபோல் வானொலி நிலையமும், உக்ரைன் போரை கண்டித்தும், ரஷ்ய அதிகாரிகள் கொடுக்கும் கெடுபடியால் தங்களது நிறுவனத்தை மூடியது. மேலும் சில குறிப்பிட்ட சர்வதேச ஊடகங்களின் சேனல்களும், நிருபர்களும் ரஷ்யாவில் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் போர் பற்றிய செய்திகளை ரஷ்யர்கள் கேட்பதைத் தடுக்கும் நோக்கில் சுதந்திரமான செய்தி நிறுவனங்களை ரஷ்ய முடிக்கி வருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. …

The post ரஷ்யாவில் டிவி சேனல் ஊழியர்கள் கூண்டோடு ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: