மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும்; தொழிலாளர்கள் வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் மண்பாண்டம் செய்யும் இனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் மண் பாண்டங்கள் செய்வதை முழுநேரத் தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் மண் பானை, மண்கொடி அடுப்பு, ஒன்றை அடுப்பு, மண் அகல்விளக்குகள், திஷ்டி பொம்மைகள், மண் உண்டியல்கள், சாமி சிறு சிலைகள் செய்து தெரு ஓரங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களது வாழ்வதாரம் ஒன்றும் சிறப்பாக இல்லை என கூறப்படுகிறது. இவர்கள் கூறும்போது, மழை பெய்தால் மண் பாண்டங்கள் காயாது. வெயில் அடித்தல் மண்வெட்டி மிதிக்க முடியாது. மண்பாண்டத்தினால் செய்த உணவுகள் உடல்நலத்திற்கு ஏற்றது. தற்சமயம் நாகரீக காலத்தில் அனைவரும் மண்பாண்டங்களை பயன்படுத்துவதை கைவிட்டு விட்டார்கள். மண் பாண்டங்களில் உணவு செய்தால் தேவையற்ற ரசாயன கலவை உடலுக்குள் செல்ல வாய்ப்பு இல்லை. மண்பானை தண்ணீர் நல்ல சுவையுடன் இருக்கும். மண் உண்டியல் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் பணம் சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கும். மண் பாண்டங்கள் செய்ய அரசு எங்களுக்கு மண் எடுத்துக் கொள்ள அனுமதியும், இடமும் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் அரசிடம் கேட்டுக் கொள்கிறார்கள். வங்கிகளில் எங்களுக்கு கடன் கொடுத்து உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும்; தொழிலாளர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: