மூன்றாம் அலையில் இருந்து தப்பிக்க சித்த மருத்துவம் சொல்லும் சிறப்பான வழிகள்!

கொரோனா முதல் அலையை விடவும் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், மூன்றாம் அலை குறித்த அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் என்று வரும் தகவல்கள் பெற்றோர் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன. கொரோனா மூன்றாம் அலை வந்தாலும், அதில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?; ;குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வராத நிலையில், நாம் நமது பாரம்பரியமான சித்த மருத்துவமுறையில் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கலாம். நமது பாட்டி வைத்திய முறைதான் இங்கும் செயலாற்றுகிறது. பொதுவாக குழந்தைகள் இறப்புக்கு 80 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடே காரணம். கிருமித்தொற்றும் இதற்கும் ஒரு காரணி. கொரோனா உள்ளிட்ட கொடிய வைரஸ் தொற்றிலிருந்து குழந்தைகளை காக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த பலரை சித்த மருத்துவம் தான் எதிர்ப்பு சக்தி கொடுத்து காத்துள்ளது. இதன்படி குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து காக்கும் முறைகளை பார்ப்போம்.மூலிகைத் தேநீர்கொரோனா பாதிப்பு ஏற்படாமல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் மூலிகை தேநீர் அருந்தலாம். சுக்கு 100 கி, அதிமதுரம் 100 கி, சிற்றரத்தை 30 கி, கடுக்காய் தோல் 30 கி, மஞ்சள் 10 கி, திப்பிலி 5 கி, ஓமம் 5 கி, கிராம்பு 5 கி, மிளகு 5 கி உள்ளிட்டவை நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் 10 கி மூலிகைப் பொடி எடுத்து 400 மில்லி நீரில் சேர்த்து 100 மில்லியாக சுண்டும் அதாவது வற்றும் வரையில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பெரியவர்களுக்கு 100 மிலி, 10 முதல் 15 வயது உள்ள குழந்தைகளுக்கு 60 மில்லி, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 30 மில்லி கொடுக்க வேண்டும்.தங்கப்பால்பசும்பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து காய்ச்சினால் அதுதான் தங்கப்பால். கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் நாம் அனைவரும் இந்த பாலினை அதிகளவில் எதிர்ப்பு சக்திக்காக அருந்தினோம். உடற்சோர்வு, மனச்சோர்வு இரண்டையும் போக்கும் குணமுள்ள தங்கப்பால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை அதாவது வைரஸ் நச்சு உள்ளிட்ட அனைத்தையும் வெளியேற்றும் தன்மையுடையது. மழைக்காலங்களில் இதனை தினந்தோறும் வயது வித்தியாசமின்றி அனைவரும் அருந்தலாம்.

The post மூன்றாம் அலையில் இருந்து தப்பிக்க சித்த மருத்துவம் சொல்லும் சிறப்பான வழிகள்! appeared first on Dinakaran.

Related Stories: