மூட்டுவலிக்கு முடிவில்லையா?!

முன்பெல்லாம் மூட்டு வலி என்பது முதியோர் பிரச்னை. இன்று அது இளம் வயதினரையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிற மூட்டுவலிக்கும் அவர்களது மாறிப்போன வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கங்களுமே பிரதான காரணங்களாக உள்ளன.* முதல் கட்ட அறிகுறியாக, சிறிது தூரம் நடந்தாலே மூட்டு வலிக்க ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் சும்மா இருந்தாலே வலிக்கும். இரவு நேரத்தில் தூக்கம் பாதிக்கிற அளவுக்கு வலி தீவிரமாகும். ஒரு கட்டத்தில் நடப்பதே சிரமமாகி கால்கள் வளைந்து போகும். ;* பொதுவாக முழங்கால், மூட்டுகளில் வலி வரும்போது, அதைப் பலரும் அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால் இரண்டு, மூன்று; வாரங்களைக் கடந்தும் இந்த வலி இருந்தால், டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது.; ;* சாதாரண எக்ஸ் ரே மூலமாகவே மூட்டு தேய்மானத்தைக் கண்டுபிடிக்கலாம். வலியின் தீவிரத்தையும், பாதிப்பின் அளவையும் பொறுத்து, மருந்து, மாத்திரைகள் மூலமாகவே சரி செய்ய முயற்சிக்கலாம். கூடவே சில பிரத்யேகப் பயிற்சிகளும், பிசியோதெரபியும் தேவைப்படும். ;* மருந்து, மாத்திரைகளுக்கு வலி கட்டுப்படாதபோது, அடுத்த கட்டமாக முழங்காலுக்குள் போடக் கூடிய ஊசி குணம் தரும். முன்பெல்லாம் ஒரு நபருக்கு ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் 5 டோஸ் போடப்பட்ட இந்த ஊசியை ஒரே டோஸாகவும் போடலாம். ஒரு சிலருக்கு மட்டும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.; ;* நம் உணவில் அரிசி சாதம்தான் பிரதானம். அதைக் குறைத்துக்கொண்டு சிறுதானியங்கள், வைட்டமின், கார்போஹைட்ரேட், கொழுப்பு என எல்லாம் சரிவிகிதத்தில் இருக்கிற மாதிரியான உணவுகளுக்குப் பழக வேண்டும். காய்கறிகள், பழங்கள் தினசரி கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.;;;

The post மூட்டுவலிக்கு முடிவில்லையா?! appeared first on Dinakaran.

Related Stories: