முன்னாள் போலீஸ் கமிஷனர் உறவினரின் வீட்டில் சொகுசு கார் திருட்டு

சென்னை: முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உறவினர் வீட்டில்  பூட்டை உடைத்து விலை உயர்ந்த மதுபானங்கள் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்ரனர். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்தவர் ரஞ்சித் ஜோசப்(55). தொழிலதிபரான இவர் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உறவினர். இவர் தனது குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மாயமாகி இருந்தது. உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அடுக்கிவைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மது பாட்டில்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன பணம் குறித்து போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்தனர்.இதுகுறித்து ரஞ்சித் ஜோசப் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சேத்துப்பட்டு போலீசார் கைரேகை நிபுணர்களுடன் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொழிலதிபர் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பாக இயங்கிவரும் சாலையில் சொகுசு கார் மற்றும் பணம் காணமல் போயிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது…

The post முன்னாள் போலீஸ் கமிஷனர் உறவினரின் வீட்டில் சொகுசு கார் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: