முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதி சிவாலயங்களில் சிவராத்திரி விழா-திரளான பக்தர்கள் தரிசனம்

முசிறி : முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதி சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.முசிறி சந்திரமவுலீஸ்வரர் சமேத கற்பூரவள்ளி அம்மன், வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர் சமேத சிவகாமசுந்தரி அம்மன், திண்ணகோணம் பசுபதீஸ்வரர், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர், தா.பேட்டை காசி விஸ்வநாதர் சமேத காசிவிசாலாட்சி அம்மன், காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமாக விளங்கும் கைலாசநாதர் சமேத கருணாகரவள்ளி அம்மன், மங்களம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர், தொட்டியம் அனலாடீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலபூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண் விழித்திருந்து வழிபாடு செய்தனர்….

The post முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதி சிவாலயங்களில் சிவராத்திரி விழா-திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: