மாவட்ட போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

தேனி, ஆக. 18: தேனியில் மாவட்ட போலீஸ் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.தேனி மாவட்ட போலீஸ் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ணைந்து ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடத்தின. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி சிவபிரசாத் முன்னிலை வகித்தார். காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான டிஎஸ்பி சக்திவேல் வரவேற்றார். இதில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா, தேனி போலீஸ் டிஎஸ்.பி பார்த்திபன், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஏஎச்எம் டிரஸ்ட் முகமதுஷேக்இப்ராகிம், ஆனைமலையான்பட்டி ரவி, எஸ்சி&எஸ்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல சங்க நிறுவனர் சுப்பிரமணியன், அரசு வக்கீல் இசக்கிவேல் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக, தேனி நகர் பெரியகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த மண்டபம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் நகர் நலச்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவ, மாணவியர் தீண்டாமை ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் வந்தனர். இதில் கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நடந்து வந்தனர். முடிவில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் நன்றி கூறினார்.

The post மாவட்ட போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: