மாவட்ட ஆட்சியரகத்தில் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

 

கரூர், ஜூன் 27: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 30ம் தேதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள் (ம) நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தை சீர்படுத்த ஏதுவாக கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 30.6.2025ம் தேதி மாலை 4 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.எனவே எரிவாயு நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட ஆட்சியரகத்தில் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: