மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் பேச்சு பெரம்பலூர் அருகே பாளையம் புனித ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழா சப்பர பவனி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பாளையம் புனித ஆரோக்கிய மாதா ஆலய 120வது ஆண்டு பெருவிழாவையொட்டி ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், புனித ஆரோக்கிய மாதா ஆலய உள்ளது. 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின், ஆண்டு பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கொடி ஊர்வலத்தை தொடர்ந்து பாளையம் புனித சூசையப்பர் தேவாலய பங்கு குரு ஜெயராஜ் விழாவிற்கு தலைமை வகித்து, கொடியை மந்திரித்து, கொடி மரத்தில் ஏற்றி வைத்து சிறப்புத் திருப்பலி நடத்தினார். இதனையடுத்து ஒவ்வொரு நாளும் மாலையில் புனித ஆரோக்கிய மாதாவின் நவநாள் திருப்பலிகள் பல்வேறு பங்கு குருக்களால், பல்வேறு தலைப்புகளில் மறையுரைகளுடன் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு, புனித ஆரோக்கிய மாதாவின் ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. பாளையம் புனித சூசையப்பர் தேவாலய பங்கு குரு ஜெயராஜ் மந்திரித்து, சப்பர பவனியைத் தொடங்கி வைத்தார். விழாவில் பாளையம் கிராமத்தினர் மட்டுமன்றி, பெரம்பலூர், திருச்சி, ரெங்கநாதபுரம், சத்திரமனை, புதுநடுவலூர், வேலூர், குரும்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விடியவிடிய ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த சப்பர பவனி, அதிகாலை ஆலய வளாகத்தை வந்தடைந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு, புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி நடத்தப்படும், ஆண்டு பெருவிழா சிறப்பு பாடல் திருப்பலி, பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில், பாளையம் புனித சூசையப்பர் தேவாலய பங்கு குரு ஜெயராஜ் முன்னிலையில் நடைபெற்றது. முடிவில் கொடியிறக்கத்திற்குப் பிறகு திருவிழா நிறைவடைந்தது.

The post மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் பேச்சு பெரம்பலூர் அருகே பாளையம் புனித ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழா சப்பர பவனி appeared first on Dinakaran.

Related Stories: