மதுரை சித்திரை திருவிழா: 2 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலம்

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக  கோயிலின் உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி விழா நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்திருப்பதால் இந்த ஆண்டு விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன் தினம் காலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான நேற்று மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும் மற்றும் மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். இந்நிலையில் சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது.கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரமடைந்தனர். பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கள்ளழகர் பச்சை பட்டுடன் எழுந்தருளியதால் இந்த ஆண்டு மக்களின் வாழ்கை பசுமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது நம்பிக்கை என்பது மக்களின் நம்பிக்கையாகும்….

The post மதுரை சித்திரை திருவிழா: 2 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: