அதிமுக முன்னாள் எம்.பி. மரணம்

ஊட்டி: நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் காலமானார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (62). வக்கீல். இவர், கடந்த 2011ல் குன்னூர் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின் 2014ல் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு எம்பி ஆனார். மாவட்ட அவைத்தலைவர் மற்றும் பல்வேறு கட்சி பொறுப்புக்களில் இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் குன்னூரில் ஓட்டுப்பட்டரை முத்தாலம்மன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை வெலிங்டன் பகுதியில் உள்ள மின் மயானத்தில் தகனம் நடந்தது.

The post அதிமுக முன்னாள் எம்.பி. மரணம் appeared first on Dinakaran.

Related Stories: