மதிமுக உருவாவதற்கு காரணமான உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை: நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

சென்னை:  மதிமுக உருவாக உயிர் நீத்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராஜபுரம் பாலன் ஆகியோருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி  சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.  துணைப் பொதுச்செயலாளர் மல்லை சி.சத்யா நிகழ்ச்சிக்கு தலைமையேற்று படங்களுக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினார்.  ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், சைதை ப.சுப்பிரணி, ராஜேந்திரன், மகளிர் அணி துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், இலக்கிய அணி துணைச் செயலாளர் காட்வின் அஜூ, தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர் இளவழகன், எழும்பூர் பகுதி  செயலாளர் தென்றல் நிசார் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்….

The post மதிமுக உருவாவதற்கு காரணமான உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை: நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: