போர் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்…அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி, எண்ணெய் விலை உயர்வே இதற்கு காரணம்!!

மும்பை ; சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சரிவை கண்டன. இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 6 நாட்களாக இழப்பு தொடர்ந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஓரளவுக்கு புள்ளிகள் உயர்ந்து வந்தன. ஆனால் இன்று காலையில் இருந்து மீண்டும் வர்த்தகம் சரிவை நோக்கி பயணித்து வருகிறது. உக்ரைன் மீது போரை தீவிரப்படுத்தி வரும் ரஷியாவால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்காவின் பங்குச்சந்தை வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.   மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து 54,041 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 16,203-க்கு வர்த்தமாகிறது. இதனிடையே ஷ்யா-  உக்ரைன் இடையிலான போரின் எதிரொலியாக பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய் 110 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,875-க்கும் ஒரு சவரன் ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.71.90-க்கு விற்பனையாகிறது….

The post போர் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்…அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி, எண்ணெய் விலை உயர்வே இதற்கு காரணம்!! appeared first on Dinakaran.

Related Stories: