பொதுமக்கள் வலியுறுத்தல் தில்லைவிளாகத்தில் தென்னை கருத்தரங்கம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் பாராசூட் கல்பவிருக்ஷா அறக்கட்டளை ஆகியவை சார்பில் தென்னை கருத்தரங்கம் நேற்று தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. முன்னோடி விவசாயி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக தென்னை விவசாய சங்க நிர்வாகி கோவிரெங்கசாமி வரவேற்றார். இதில் கோயம்புத்தூர் தென்னை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிபுணர் கண்ணன் பேசுகையில், தென்னை வளர்ப்பு பராமரிப்பு, நோய்களிருந்து காப்பது, குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவது எப்படி , தென்னைக்கு நீர் எப்படி செலுத்துவது, சொட்டுநீர் பாசனம் குறித்து தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பேசினார். இதில் தஞ்சாவூர் திட்ட ஒருங்கிணைப்பாளர் நெப்போலியன், அக்ரி குமரேசன், காங்கிரஸ் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ராஜ்மோகன், விவசாயிகள் ஆதித்தியன் உட்பட தில்லைவிளாகம் தம்பிக்கோட்டை இடும்பாவனம், ஜாம்புவானோடை உட்பட சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் வலியுறுத்தல் தில்லைவிளாகத்தில் தென்னை கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: