பெண்ணை ஆபாசமாக பேசியவர் கைது வந்தவாசி அருகே

வந்தவாசி, ஜூன் 19: வந்தவாசி அடுத்த வடக்குபட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மனைவி பிரபாவதி(30). இவர் கடந்த மாதம் 30ம் தேதி தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி(30) என்பவர் முன்விரோதம் காரணமாக பிரபாவதி பார்த்து ஆபாசமாக பேசினாராம். இதுகுறித்து பிரபாவதி தேசூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து செல்வமணியை கைது செய்தார்.

The post பெண்ணை ஆபாசமாக பேசியவர் கைது வந்தவாசி அருகே appeared first on Dinakaran.

Related Stories: