பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் குட்கா கடத்திய 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் குட்கா கடத்திய விற்பனையாளர்கள், ஓட்டுநர், நடத்துனர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்றவற்றை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம்  சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் விரைவில் குட்காவை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை, உணவு கட்டுப்பாட்டு துறை, போலீசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை செய்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளில் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வருவதாக சூளைமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் போலீசார் சென்னை வந்த ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து குட்கா விற்பனையாளர்களான சென்னை, பாடியை சேர்ந்த நடராஜன் (50), கோயம்பேடு பகுதியை சேர்ந்த முருகன் (25), பேருந்து ஓட்டுநர்கள் தர்மபுரியை சேர்ந்த பிரபாகரன் (29), பம்மலை சேர்ந்த ஆனந்தராஜ் (38) குடியாத்தத்தை சேர்ந்த நடத்துனர் நந்தகோபால் (31) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா மற்றும் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட குட்கா விற்பனையாளர் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் குட்கா கடத்திய 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: