இந்தியா புதுச்சேரியில் தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்..!! Jun 14, 2021 டிஎம்க்-வினா புதுச்சேரி திமுக கொரோனா திமுக வினார் புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டமன்ற குழு தலைவர் சிவா, திமுக எம்.எல்.ஏக்கள் சம்பத், கென்னடி, செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். அப்போது தனியார் பள்ளி கட்டண கொள்ளையை கண்டித்தும், நீதிமன்றம் அறிவுறுத்திய கல்வி கட்டண முறையை அரசு அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியர்கள் மத்தியில் பேசிய புதுச்சேரி திமுக சட்டமன்ற குழு தலைவர் ஆர்.சிவா, தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரத்தை முறையாக பின்பற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். புதுச்சேரியில் கொரோனா காலத்திலும் ஆன்லைன் வகுப்பு மூலம் அனைத்து தனியார் பள்ளிகளும் வகுப்புகள் நடத்தி வருகின்றன. பேரிடர் காலத்திலும் அனைத்து பெற்றோர்களையும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் என்று மிரட்டுவதாக புகார் எழுந்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திமுக-வினர் தெரிவித்துள்ளனர். … The post புதுச்சேரியில் தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.
சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை காரில் விரட்டிப் பிடித்த நடிகை நவ்யா நாயர்
பணமோசடி தடுப்பு சட்டம் தொடர்பான சீராய்வு மனு மீதான விசாரணை அக்.3க்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி: அரியானா பேரவை தேர்தலையொட்டி காங். வாக்குறுதி
பிரதமரின் 100 நாட்களின் சாதனை வளர்ச்சி அடைந்த நாட்டுக்கான அடித்தளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்
நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர் காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: 59 சதவீத வாக்குகள் பதிவானது
பாஜ தலைவர்களின் கொலை மிரட்டல் பேச்சுகளால் ராகுலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டெல்லி போலீசில் காங்கிரஸ் புகார்
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு: முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு
சந்திரயான்-4, விண்வெளி மையம் உட்பட பல விண்வெளி திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: ரூ.24,000 கோடியில் உர மானியம்
அழகாக போட்டோ எடுப்பதாக அழைத்து சென்று அறையில் கட்டிப்போட்டு விடிய விடிய 28 மாணவிகள் பாலியல் பலாத்காரம்: விடுதி நிர்வாகி, 2வது மனைவி, மருமகளுக்கு வலை