புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வீடு உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.34 லட்சம் மதிப்பிலான 1300 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மஜ்வாடி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் மஜ்வாடி என்ஜிஓ காலனியில் பழனிவேல் என்பவர் வீட்டில் புகுந்து போலீசார் சோதனை நடத்தியதில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 20 கிலோ ஹான்ஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் பழனிவேலை கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் பதுக்களில் ஈடுபட்ட போஸ் நகர் 6ம் வீதியை சேர்ந்த முகமது கனி என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 34 லட்சம் மதிப்பிலான 1300 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களையும், கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post புதுக்கோட்டையில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: பதுக்களில் தொடர்புடைய 2 பேர் கைது; 1300 கிலோ ஹான்ஸ், கார் பறிமுதல் appeared first on Dinakaran.