ஆற்று நீர்போல் பழுப்பு நிறமாக மாறிய தரங்கம்பாடி கடல்நீர்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி கடல் நேற்று ஆற்றுநீரை போல் பழுப்பாக காணப்பட்டது. நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள கடல் நீரோட்டம் காரணமாக அடிக்கடி கலர் மாறி வருகிறது. நேற்று கடல் நீர் ஆற்று தண்ணீரை போல் பழுப்பாக காணப்பட்டது. மேலும் அலைகளும் இல்லாமல் அமைதியாக இருந்தது. பொதுவாக அமாவாசை அன்று கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

ஆனால் நேற்று அமாவாசை என்றாலும், வழக்கத்துக்கு மாறாக கடல் அமைதியாக இருந்தது. இது குறித்து  மீனவர்கள் கூறியதாவது. தரை காற்று அதிகமாக வீசுவதால் கடல் உள்வாங்கும் சக்தியை இழந்து விடுகிறது. அது போன்ற நேரங்களில் கடல்நீர் பழுப்பாக காணப்படும். கடல் உள்வாங்கும் சக்தியை இழக்கும் நேரத்தில் கடல் அலையும் அதிகம் இருக்காது என்று கூறினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: