கரூர்: தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது என அமித்ஷா கூறுவதை ஏற்க முடியாது என தம்பிதுரை கூறியுள்ளார். அமித்ஷழ பொதுப்படையாகத்தான் கூறியுள்ளார் என கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு இடமில்லை எனவும், 5 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி நடைபெறும் எனவும்; யாரும் வீழ்த்த முடியாது எனவும் கூறினார். தமிழகத்தில் திராவிட கட்சிகளை வீழ்த்த முடியாது எனவும் ஆந்திரா, கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க கனவு காணலாம் என கூறினார்.
