பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

இளையான்குடி:  சாலைக் கிராமம் பஸ் ஸ்டாண்டில் தேங்கும் கழிவு நீரில்,  தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இளையான்குடி ஒன்றியம் சாலைக் கிராமத்திற்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். மதுரை, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர் ஆகிய இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும், சாலைக் கிராமம் பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பேர் வந்து செல்லும் சாலைக் கிராமம் பஸ் ஸ்டாண்ட் படுமோசமான நிலையில் குண்டும் குழியும் உள்ளது. மழைநீர் வடிய கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் அப்படியே பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்குகிறது. நீண்ட நாட்களாக தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கும் கழிவுநீரில் உட்காரும் கொசுக்கள், அருகில் விற்பனை செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன், கருவாடு ஆகியவற்றின் மீது உட்காருகிறது. அதை வாங்கி உண்ணும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது. கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பஸ் ஸ்டாண்டை சீரமைக்க இப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சாலைக் கிராமம் பஸ் ஸ்டாண்டை சீரமைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சாலைக் கிராமம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: