பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் அமைக்க வேண்டுகோள்

 

தொண்டி, டிச.11: தொண்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் இல்லாமல் நின்று கொண்டு இருக்கின்றனர். இதனால் மழை மற்றும் வெயில் நேரங்களில் கடும் சிரமம் அடைவதால், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை, ராமேஸ்வரம், தூத்துக்குடி என அனைத்து பகுதிக்கும் போக்குவரத்து வசதி உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் நிழற்குடையில் தான் ஆண் மற்றும் பெண் பயணிகள் காத்திருக்கின்றனர். 10 முதல் 20 நபர்கள் மட்டுமே அந்த நிழற்குடையில் இருக்க முடியும் என்ற நிலையில் மற்றவர்கள் வெளியில் தான் நிற்க வேண்டியுள்ளது. கடைகளின் முன்பு போடப்பட்டுள்ள ஸ்டோன் பெஞ்சும் பயன் பாடற்ற நிலையில் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு எவ்வித வசதியும் இங்கு இல்லை. ஒரு பேரூராட்சியின் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாதது கடும் சிரமத்தை ஏற்ப்படுத்துகிறது. உடனடியாக கூடுதல் இருக்கைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆனந்தன் கூறியது, தொண்டி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வெயில் மற்றும் மழை நேரங்களில் கடும் சிரமம் அடைகின்றனர். பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு எவ்வித வசதியும் இல்லை. கடுமையான சிரமத்தை பயணிகள் அனுபவித்து வருகின்றனர். மற்ற பஸ் ஸ்டாண்டில் உள்ளது போல் கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் அமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: