பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை

 

கிருஷ்ணராயபுரம், ஜூன் 30: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்  ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் பழமை வாய்ந்த சிவாலயம் ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நால்வர்களுக்கு பால், தயிர் ,பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம், திருநீர், இளநீர் போன்ற திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாணிக்கவாசகர் கோயில் பிரகாரம் வலம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவனடியார்கள் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை appeared first on Dinakaran.

Related Stories: