பந்தலூர் பகுதியில் கனமழை எருமாடு கூலால் பகுதியில் மரம் விழுந்து பாதிப்பு

 

பந்தலூர், ஜூலை 16: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேக மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் பந்தலூரில் 56 மிமீ மழையும், தேவாலாவில் 62 மிமீ, சேரங்கோடு 72 மிமீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கனமழை காரணமாக பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அரசு பழங்குடியினர் பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் இருந்து வந்த மரத்தை வருவாய்த்துறை சார்பில் விஏஒ யுவராஜ் மேற்பார்வையில் வெட்டி அகற்றப்பட்டது. எருமாடு கூலால் பகுதியில் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் இருந்து வந்த கிராண்டீஸ் மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

The post பந்தலூர் பகுதியில் கனமழை எருமாடு கூலால் பகுதியில் மரம் விழுந்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: