பணம் வாங்கி கொண்டு காங். வேட்பாளர்கள் தேர்வா?.. சென்னை சத்தியமூர்த்தி பவனில் விஷ்ணு பிரசாத் உண்ணாவிரதம்

சென்னை: பணம் வாங்கி கொண்டு வேட்பாளர் தேர்வு நடப்பதாக கூறி காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர்கள் பட்டியலுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ெடல்லி சென்றுள்ளனர். அங்கு, நடைபெறும் தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் பணம் பெற்று கொண்டு வேட்பாளர்களை ேதர்வு செய்வதாக காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் எம்பி, சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். அவருடன் 50க்கு மேற்பட்ட தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில், ‘பணம் வாங்கி கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய கூடாது’ என வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post பணம் வாங்கி கொண்டு காங். வேட்பாளர்கள் தேர்வா?.. சென்னை சத்தியமூர்த்தி பவனில் விஷ்ணு பிரசாத் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: