மாதவரம் சுதர்சனத்தை ஆதரித்து ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பு

புழல்: புழல் 23வது வார்டு திமுக தேர்தல் பணிமனை ஜிஎன்டி சாலை அருகே திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், பூவை மூர்த்தியார் மக்கள் பேரவை, இந்திய முஸ்லிம் லீக், மனித நேய  மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர், அண்ணா நினைவு நகர், ஜிஎன்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்று வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘புழல் பகுதியில் நீண்டநாள் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம், வீட்டு குடிநீர் இணைப்பு, இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பகுதியில் உரிய முறையில் கட்டிமுடிக்காமல் பாதியில் நிற்கின்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியை விரைந்து முடிக்கவும், அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து தரவும் திமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை  உடனுக்குடன் நிறைவேற்றிடவும் பாடுபடுவேன்,’  என்றார். தேர்தல் பணிமனை திறப்பின்போது, புழல் 9வது வார்டு அதிமுக முன்னாள் அவை தலைவர் பழனி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி மாதவரம் சுதர்சனம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.  தொடர்ந்து, நேற்று மாதவரம் சுதர்சனத்தை ஆதரித்து ஆ.ராசா எம்.பி பாடியநல்லூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Related Stories: