படகுகள் சேதமாகாமல் இருக்க நம்புதாளை ஆற்றை தூர்வார கோரிக்கை

தொண்டி, பிப். 3: தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள ஆற்றுப்படுகையை, மீனவர்கள் படகுகளை கரை நிறுத்தும் வகையில் தூர்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தொண்டி அருகே நம்புதாளையில் 100க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த படகுகளை நிறுத்த அங்குள்ள கடற்கரை பகுதியில் போதிய இடவசதி இல்லை. இதனால் பெரும்பாலான படகுகளை ஆற்றுப் பகுதியில் நிறுத்துகின்றனர். மழை காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது, கடற்கரையில் நிறுத்தியிருக்கும் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதால் சேதமடைந்து விடுகிறது.

அதனால் ஆற்றுப்பகுதியை தூர்வாரி ஆழப்படுத்தினால், அதிகளவில் படகுகளை நிறுத்தி வைக்கலாம். இதனால் அவற்றின் சேதாரத்தை தவிர்க்கலாம். எனவே ஆற்றுப்பகுதியை அரசு தரப்பில் விரைவாக தூர்வார வேண்டும் என்று இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் ஆறுமுகம் கூறும்போது, ‘‘மீனவர்களின் நலன் கருதி நம்புதாளை ஆற்றுப்பகுதியை தூர்வார வேண்டும் என்று கலெக்டர் உட்பட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தோம்.

இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. புயல் மழை நேரங்களில் படகுகள் சேதமடைந்த பிறகு அதற்காக நிவாரணம் வழங்குவதைவிட, முன்னதாக சேதத்தை தவிர்க்கும் வகையில் ஆற்றுப்படுகையை தூர்வாரினால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

The post படகுகள் சேதமாகாமல் இருக்க நம்புதாளை ஆற்றை தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: