நெல்லை, தென்காசி மாவட்ட டாக்டர்களுக்கு பாதம் பாதுகாப்போம் திட்ட பயிற்சி முகாம்

தியாகராஜ நகர், ஆக. 17: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில். குடும்ப நல சுகாதாரத்துறை சார்பில் நெல்லை, தென்காசி மாவட்ட அளவில் ”பாதம் பாதுகாப்போம்” திட்ட 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது. மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார். கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் துரை முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களான நெல்லை மாவட்ட 67 மருத்துவ அலுவலர்கள், தென்காசி மாவட்ட 57 மருத்துவ அலுவலர்கள் பங்கேற்று உள்ளனர். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதம் பாதிப்பு குறித்து முன்னதாகவே கண்டறியும் முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர் செந்தில் சிவமுத்து, பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் பபிதா தேவி, டாக்டர்கள் கார்த்திகாயினி, மைக்கேல் சென்ராஜ், நவநீதகிருஷ்ண பாண்டியன், ஜாபர் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இன்றும் (17ம் தேதி) பயிற்சி முகாம் நடக்கிறது. ஏற்பாடுகளை அரசு மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை செய்துள்ளது.

The post நெல்லை, தென்காசி மாவட்ட டாக்டர்களுக்கு பாதம் பாதுகாப்போம் திட்ட பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: