நுங்கம்பாக்கம் பகுதியில் தேர்தல் அதிகாரியிடம் வாக்கி டாக்கி திருட்டு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் ேநற்று முன்தினம் இரவு ஆயிரம் விளக்கு தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி அறிவழகன் (45) தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகன சோதனை முடிவடைந்ததும் தேர்தல் அதிகாரி தனது வாகனத்தில் சூளைமேடு பகுதிக்கு சென்று கொண்ருந்தார். அப்போது அவர் வைத்திருந்த வாக்கி டாக்கியை பார்த்தபோது மாயமானது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அறிவழகன் வாகன சோதனையில் ஈடுபட்ட மகாலிங்கபுரத்தைற்கு திரும்பி வந்து தேடி பார்த்தும் வாக்கி டாக்கி கிடைக்கவில்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரி அறிவழகன் வாக்கி டாக்கி மாயமானது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வாகன சோதனை நடத்திய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று வாக்கி டாக்கியை திருடி சென்ற மர்ம நபரை  தேடி வந்தனர். இதனிைடையே, 2 வாலிபர்கள் சாலையோரம் வாக்கி டாக்கி கிடந்ததாக கூறி, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது….

The post நுங்கம்பாக்கம் பகுதியில் தேர்தல் அதிகாரியிடம் வாக்கி டாக்கி திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: