நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

 

ஜெயங்கொண்டம், ஜூன் 14: ஜெயங்கொண்டம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி சாலையில் நின்று கொண்டிருந்தது. அதே சாலையில் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு டிப்பர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் டிரைவர்களும் லேசான காயம் அடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து நடந்த போது அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: