‘நாங்க சாகப் போகிறோம்…’ 230 கிமீ வேகத்தில் காரை ஓட்டி லாரி மீது மோதி 4 பேர் பலி: பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்ட போது விபத்து

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ – காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 15ம் தேதி லாரி மீது கார் மோதி பயங்கரவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிஎம்டபிள்யூ காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக காரில் பயணித்த 4 பேரும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் காரில் டெல்லி நோக்கி 4 பேர் பயணித்துள்ளனர். அந்த காரை பீகாரில் உள்ள தனியார் மருத்துக்கல்லூரி பேராசிரியராக உள்ள ஆனந்த் பிரகாஷ்(35)  ஓட்டி உள்ளார். இவருடன் பொறியாளர் தீபக் குமார், அகிலேஷ், முகேஷ். இதில், காரில் இருந்த ஒருவர், ‘எங்கள் கார் 230 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்து 300 கிலோ மீட்டர் வேகத்தை தொடப் போகிறது’ என லைவ் வீடியோவில் சொல்ல மற்றொருவர் நாங்கள் நால்வரும் சாகத்தான் போகிறோம் என்று கூறிய சில நிமிடங்களில், சாலையில் எதிரே வந்த லாரி மீது கார் அதிக வேகமாக மோதி பயங்கர விபத்துக்குள்ளானது….

The post ‘நாங்க சாகப் போகிறோம்…’ 230 கிமீ வேகத்தில் காரை ஓட்டி லாரி மீது மோதி 4 பேர் பலி: பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்ட போது விபத்து appeared first on Dinakaran.

Related Stories: