நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்: தனியார் கட்டிடங்கள், வீடுகளிலும் ஆய்வு செய்ய உத்தரவு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை காரணமாக, குமரி மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் நள்ளிரவில் திடீரென பெய்த பலத்த மழை பெய்ததுடன், காற்றும் பலமாக வீசியது. இதனால் பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகர பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை விட்டு விட்டு  பெய்த வண்ணம் உள்ளது. நேற்றும் காலையில் இருந்து விட்டு, விட்டு மழை பெய்தது.  மழை காலமாக இருப்பதால் தற்போது கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களிலும், வீடுகளிலும் உடைந்து கிடக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இந்த வகையிலான கொசுக்களால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவ வாய்ப்பு உண்டு. எனவே மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் தற்போது கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், காய்கறி, மீன் சந்தைகள் மற்றும் பொது இடங்களில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வுக்கு வரும் கொசு புழுக்கள் உற்பத்தி கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார். ஆணையர் உத்தரவை தொடர்ந்து வீடுகள், தனியார் கட்டிடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்….

The post நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்: தனியார் கட்டிடங்கள், வீடுகளிலும் ஆய்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: