நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நெறிமுறைகளை வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம்: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நெறிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் போலீசாருக்கான, ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆர்த்தி, தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கொரோனா நெறிமுறைகள் படி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடித்து, திறந்தவெளி மைதானத்தில் அரசியல் கட்சி அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் 1000 பேர், அல்லது கூட்ட திடலின் கொள்ளளவுக்கு 50 சதவீத மக்கள் அல்லது அதில் குறைவான எண்ணிக்கையுடன் கூட்டம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனுமதியளிக்க முடிவெடுத்துள்ளது.உள்அரங்கத்தில் நடக்கும் கூட்டத்தில் அதிகபட்சம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உள் அரங்க கூட்டத்தின் கொள்ளளவை பொறுத்து 50 சதவீத பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். மாநில தேர்தல் ஆணையம் அனுமதிபடி, உள்ளரங்கு கூட்டம் நடத்தும்போது மாவட்ட தேர்தல் அலுவலரால் கொரோனா தொடர்பான பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட அலுவலரிடம் பெற வேண்டும்.தேர்தல் நடவடிக்கைகளின்போது, அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும், வாக்காளர்களும் கொரோனா விதிமுறைகளை இணக்கமாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நெறிமுறைகளை வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: