தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு நேர்காணல்

 

கூடலூர், ஜூலை 2: கூடலூர் தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் இயங்கி வரும் டெக்ஸ்மோ தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் கந்தவேல் மற்றும் நிர்மல் பாபு ஆகியோர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் பிட்டர், வயர்மேன் மற்றும் எலக்ட்ரிசியன் பிரிவு மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தினர்.

பயிற்சி நிலைய முதல்வர் ஷாஜி எம். ஜார்ஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர் ராஜா வரவேற்று பேசினார். தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி கந்தவேல் வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். இந்த நேர்காணலில் பயிற்சி நிலையத்தின் 2ம் ஆண்டு பொருத்துநர், மின்கம்பியாளர் மற்றும் எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் டெக்னிஷியன் பிரிவுகளிலுள்ள 60 பயிற்சியாளர்கள் பங்கு பெற்றனர். முடிவில் ஆசிரியை அம்மினி நன்றி கூறினார்.

The post தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு நேர்காணல் appeared first on Dinakaran.

Related Stories: