தொப்பூர் கணவாயில் விபத்து தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நல்லம்பள்ளி : தொப்பூர் அருகே அரிசி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஒடிசா மாநிலத்திலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை கேரள மாநிலத்தை சேர்ந்த அனுபு(31) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவரான காங்கேயத்தைச் சேர்ந்த பழனி(42) வந்தார். நேற்று மதியம் சுமார் 12 மணியளவில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், தடுப்பு சுவரில் மோதி, சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. லாரியில் வந்த இரண்டு டிரைவர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு, எஸ்ஐ வாசன், அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த டிரைவர் பழனியை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பி வைத்தனர். மேலும், தர்மபுரி தீயணைப்புத்துறையினர் வந்து, ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 50 சதவீத அரிசி மூட்டைகள் தீயில் கருகியது. இந்த விபத்தால், சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தது. பொக்லைன் மூலம் சாலையில் கொட்டியிருந்த அரிசி மூட்டைகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை போலீசார் சீர்படுத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

The post தொப்பூர் கணவாயில் விபத்து தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: