தேர்தல் விழிப்புணர்வு ேகாலம்

திருப்புத்தூர், ஏப். 6: திருப்புத்தூரில் நேஷனல் சமுதாயக் கல்லூரி மாணவிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணப் பெருமாள் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். நேஷனல் கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார்.

தொடர்ந்து திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள நேஷனல் சமுதாயக் கல்லூரி மாணவியரால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடும் விதமாக மாபெரும் கோலம் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post தேர்தல் விழிப்புணர்வு ேகாலம் appeared first on Dinakaran.

Related Stories: