தெப்பக்குளத்திற்கு தடுப்பு சுவர் வருமா?

 

கோவை, செப்.24: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் முன் தெப்பக்குளம் இருக்கிறது. சுவாமி தரிசனம் செய்யும் முன் இந்த குளத்தை பக்தர்கள் பார்வையிடுவது வாடிக்கையாக நடக்கிறது. தெப்ப திருவிழாவும் இங்கே விமரிசையாக நடத்தப்படுகிறது. கோயிலின் பெருமை பெற்ற இந்த தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து விட்டது. இதை சரி செய்யாமல் ஆங்காங்கே தடுப்பு தகரம் அமைத்து கோயில் நிர்வாகத்தினர் சமாளித்துள்ளனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த இடத்தில் இந்த தெப்பக்குளம் இருக்கிறது. விபத்து ஏற்பட்டால் தெப்பக்குளத்தில் விழுந்து விடும் அபாயம் இருக்கிறது. இதை தடுக்க நான்கு பக்கத்திலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். தெப்பக்குளத்தை மக்கள் பார்வையிட தேவையான அளவு பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும். குளத்தை நீரை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post தெப்பக்குளத்திற்கு தடுப்பு சுவர் வருமா? appeared first on Dinakaran.

Related Stories: