தென்னாப்ரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன், ஓய்வு எடுக்க விரும்பியது இல்லை: விராட் கோலி பேட்டி

மும்பை: தென்னாப்ரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்று விராட் கோலி பேட்டியளித்துள்ளார். ஓய்வு எடுக்க ஒருபோதும் விரும்பியது இல்லை என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.நான் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகுவதாக அணி தலைமையிடம் பேசியிருந்தேன். ஆனால் டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் தலைமை அணி தேர்வாளர் அழைத்து ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக கூறினார்.அதற்கு முன் என்னிடம் இதுகுறித்து யாரும் எதுவும் பேசவே இல்லை. கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரோகித் சர்மா திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானவர். நான் இப்போதும் இந்திய அணிக்காக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராகவே இருக்கிறேன் என்று விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.புதிய கேப்டன் ரோகித் சர்மாவிற்கும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் எனது 100% ஆதரவு இருக்கும். அணியை சரியான வழியில் நடத்தி செல்ல தேவையானதை செய்வேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். எனக்கும் ரோகித் சர்மாவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை. இரண்டு வருடங்களாக தெளிவுபடுத்தி வருகிறோம் என்று விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.டி20 கேப்டன் பதவியை விட்டு விலகும் போதே நான் பிசிசிஐ நிர்வாகிகளிடம் தெளிவாக குறிப்பிட்டேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்கிறேன் என்றும் அணி தேர்வாளர்களோ, பிசிசிஐயோ நான் எந்த பொறுப்பையும் கையாள வேண்டாம் என நினைத்தால் எனக்கு அதிலும் பிரச்சனை இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியதாக விராட் கோலி பேட்டியில் தெரிவித்துள்ளார்….

The post தென்னாப்ரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன், ஓய்வு எடுக்க விரும்பியது இல்லை: விராட் கோலி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: