திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 3 பேருக்கு ₹60 ஆயிரம் அபராதம்-வனத்துறையினர் நடவடிக்கை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்த 3 பேருக்கு வனத்துறை மூலம் ₹60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.திருவண்ணாமலை பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் ஆயிரக்கணக்கான காட்டுப்பன்றிகள் உள்ளன. எனவே, அவற்றை வேட்டையாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமம் சமத்துவபுரம் பகுதிக்கு அருகே காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், நேற்று திருவண்ணாமலை வனச்சரகர் சீனுவாசன் தலைமையில் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, காப்புக்காடு பகுதியில் வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றியின் இறைச்சியை தக்காளி கூடையில் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பவித்திரம் கிராமம் பாபு மகன் மணிகண்டன்(32), அண்ணாமலை மகன் பிரகாஷ்(26), தேவேந்திரன் மகன் ரமேஷ்(42) ஆகியோருக்கு, வனத்துறை சார்பில் தலா ₹20 ஆயிரம் வீதம் ₹60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது….

The post திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 3 பேருக்கு ₹60 ஆயிரம் அபராதம்-வனத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: