திருப்பத்தூர் ஜவ்வாது மலை பகுதியில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர்-மலைவாழ் மக்கள் இனத்தில் முதல் டாக்டர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில் வசித்து வரும் கிராமமக்கள்  கால் நடைவளர்ப்பு மற்றும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள புதூர் நாடு, நெல்லி வாசல் நாடு, புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட ஊராட்சிகளில் 35 கிராமங்கள் உள்ளது. அத்தியாவசிய தேவைக்காக திருப்பத்தூர் பகுதிகளுக்கு வரும் மலைவாழ் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜவ்வாது மலையை சேர்ந்தவர் மருத்துவர் வெங்கட்குமார். இவர் அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து விட்டு மெரிட் கிரேடில் எம்பிபிஎஸ் திருச்சியில் உள்ள அரசு மருத்துவ க்கல்லூரியில் படித்தார். பின்னர், திருப்பத்தூர் நகராட்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.  சொந்த கிராம மக்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டு சொந்த ஊருக்குச்சென்று அங்குள்ள மக்களுக்கு நாள்தோறும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயால் பாதித்தவர்களை அவர்களின் வீடுகளுக்குச்சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். மலை கிராமத்திலேயே தற்போது தங்கி சிகிச்சை அளித்து வருகிறார். அவர் சிகிச்சை அளித்ததில் இருந்து ஜவ்வாது மலைப்பகுதியில் ஒரு உயிரிழப்புகள் கூட ஏற்படவில்லை. இதுகுறித்து மருத்துவர் வெங்கட்குமார் கூறுகையில், ‘நான் மலைவாழ் இனத்தை சேர்ந்தவன். நான் படிக்கும்போதே சொந்த கிராமத்தில் மருத்துவ பணியாற்ற வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. அதனடிப்படையில்  நான் தற்போது அரசு மருத்துவராக உள்ளேன். எங்கள் பகுதி மக்கள் கொரோனாவால் சிரமப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு மருத்துவ சேவை செய்வது மன நிம்மதியாக உள்ளது’ என்றார்….

The post திருப்பத்தூர் ஜவ்வாது மலை பகுதியில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர்-மலைவாழ் மக்கள் இனத்தில் முதல் டாக்டர் appeared first on Dinakaran.

Related Stories: